வெற்றி பாதையில் நித்ராவின் பயணம் 7 ஆம் ஆண்டை வெற்றிகரமாக கடந்து 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

தமிழ்- ஆங்கில அகராதி செயலி

சிறு விதையாய் 2012-ல் அடியெடுத்து வைத்து நித்ரா தமிழ்- ஆங்கில அகராதியாய் துளிர்விட்டு எழுந்தோம்!

Nithra Edu Solutions India Pvt. Ltd

விதையென விழுந்து ஆலமரம் விருட்சமாய் வளர்வது போல் 2013-ல் Nithra Edu Solutions India Pvt. Ltd., என்ற பெயர் கொண்டு வளர்ந்தோம்!

TNPSC செயலி

2014-ஆம் ஆண்டு முதல் TNPSC App வாயிலாக வசதியில்லாத படித்த இளைஞர்களை அரசு அதிகாரி ஆக்கி அழகு பார்த்தது நித்ரா!

நித்ரா நாட்காட்டி செயலி

இரவு பகல் பார்க்காமல், வெயில் மழைக்கு ஓயாமல், நேரங்காலம் என எதுவும் பார்க்காமல் உழைத்த நித்ராவிற்கு திருப்புமுனையாய், 50 இலட்சத்திற்கும் அதிகமான இதயங்களுக்கு சொந்தமான நித்ரா நாட்காட்டியை 2015 ஆம் ஆண்டில் உருவாக்கியது!

நித்ரா சமையல் செயலி

உணவே மருந்து என்ற நிலைமாறி மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இந்நேரத்தில் நம்ம ஊரு பாரம்பரிய சமையல், கொங்கு நாட்டு சமையல், செட்டிநாட்டு சமையல் உட்பட அனைத்து உணவு வகைகளையும் சமைப்பது எப்படி? ரெசிபிக்கு பேர் வைத்து சமைக்க தொடங்கிய இக்கால கட்டத்தில் நாம் நம் வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து என்ன சமைக்கலாம் என்று சொல்லிக்கொடுத்தது நித்ரா சமையல் செயலி. புதிதாக சமைப்பவர்களுக்கு கைப்பக்குவத்தை கற்றுக்கொடுத்த நித்ரா சமையல் App 2016 ஆம் ஆண்டு தயாரானது.

சொல்லிஅடி செயலி

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடை மொழியாகும் அன்பே அவனுடை வழியாகும் - என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில், சொல்லாமல் அடிப்பவன் வீரனல்ல... சொல்லி அடித்து தமிழுக்கு தொண்டு செய்தது நித்ரா! ஆம். 2017-ஆம் ஆண்டு சொல்லிஅடி - தமிழோடு விளையாடு செயலியை தமிழருக்காகவும், தமிழை நேசிப்பவர்களுக்காகவும் உருவாக்கியது.

நித்ரா விவசாயம் செயலி

வீழும் விவசாயத்தை விருட்சமாக மாற்ற வேண்டிய நேரத்தில் விவசாயிகளின் கரம் கோர்த்து, விவசாயிகளின் வாரிசாக வயக்காடு முதல் வீட்டுத்தோட்டம் வரை வேளாண்மை செய்ய அனைவருக்கும் கற்றுக்கொடுத்தது. மடிக்கணினியை பயன்படுத்தி மாடியில் வசிப்பவரும் மாடித்தோட்டத்தில் விவசாயம் செய்ய வைத்த பெருமை 2017-ல் நித்ராவிற்கும் உரியதானது.

நித்ரா பதிப்பகம்

நித்ராவின் TNPSC தமிழ் செயலிக்கு கிடைத்த பேராதரவின் அடிப்படையில் ஜோதிடம்- ஆன்மீகம் கொஞ்சம் அறிவியல், கேள்விகள் 1000!.. கனவு பலன்கள், வளமான வாழ்க்கைக்கு வாஸ்து ரகசியங்களும் &பரிகார தலங்களும், குபேர வாழ்வு தரும் ஸ்ரீபைரவர் வழிபாடு, 63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்,உங்கள் ஜாதகம் வழிகாட்டும் கல்வியும் உத்தியோகமும்,சித்தர்களின் 1008 ஜோதிட ரகசியங்கள், TNPSC - VAO -கிராம நிர்வாக அலுவலர், TNTETஆசிரியர் தகுதி தேர்வு Paper - 1 வினா வங்கி, TNPSC CCSE - IV(Group 4 + VAO) 10+4 SET Q&A , The Complete Guide To SPOKEN ENGLISH Tamizh - English, TNPSC General English, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு, TNPSC கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை, TNPSC பொதுத்தமிழ் வினாவங்கி (Q&A) , TNPSC பொதுத்தமிழ், TNPSC General Studiesபோன்ற பயனுள்ள புத்தகங்களை நித்ரா பதிப்பகம் வெளியிட்டது. நித்ரா பதிப்பகம் 2017-ல் ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்பு குயிலாக, நித்ராவின் கிளையாக, ஒன்றாக பயணத்தை தொடங்கியது.

நித்ரா வேலைவாய்ப்பு செயலி

இந்த படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று கஷ்டப்பட்டு படித்தும் வேலை கிடைக்காமல் உற்சாகம் இழந்து தடுமாறும் இளைஞர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்புகளையும் தொகுத்து கொடுத்துக்கொண்டுள்ளது நித்ரா வேலைவாய்ப்புகள் செயலி. எண்ணற்ற இளைஞர்கள் நல்ல வேலை கிடைத்துள்ளது என்று உற்சாகமாக நன்றி தெரிவிக்கும் போது, மேலும் சிறப்பான சேவைகளை வழங்க நித்ரா வேலைவாய்ப்புகள் செயலி புதிய உத்வேகத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நித்ரா ஹிந்தி நாட்காட்டி செயலி

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளை உரமாக எடுத்துக்கொண்டு வளர்ந்த நித்ரா ஹிந்தி மொழியிலும் 2018-ஆம் ஆண்டு காலண்டர் செயலி வாயிலாக புத்துணர்ச்சியோடு வளர்கிறது. " பஹத் படியா ஹிந்தி காலண்டர் ".

நித்ரா IOS செயலி

ஆன்ராய்ட் மட்டுமே அடித்தளம் என்ற நிலைமாறி இதோ IOS-லயும் வேரூன்றி வளர்ந்து வருகிறது.

Telugu Calendar

தெலுங்கு மொழி... பேசுவதற்கு எளிமை! எழுதுவதற்கோ புதுமை!! 2019-ல் நித்ரா தெலுங்கு மொழியிலும் அடியெடுத்து வைத்தது! நித்ரா தெலுங்கு நாட்காட்டி 2019-ல் உதயமானது. " சால பாகுன்தி தெலுங்கு காலண்டர்! ".

Nithra Apps India Pvt Ltd

கல்விக்கு பெறும் பங்காற்றிய Nithra Edu Solutions India Pvt. Ltd நிறுவனம், அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து உலகளவில் Nithra Apps India Pvt Ltd என புதிய பரிமாணம் பெற்றுள்ளது.

Nithra School Connect

நோய் தொற்றினால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் கல்வி பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இந்நிலையில் பள்ளியில் இருக்கும்போது கற்பித்ததுபோலவே / கற்றதுபோலவே Nithra School Connect App வாயிலாக படிக்கலாம். கல்வி நிறுவனங்கள் நடத்தி கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக Nithra School Connect App உருவாக்கப்பட்டது.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல அன்று குறைவானவர்களைக் கொண்டு நிறைவான பல செயலிகளை உருவாக்கினோம்.

ஆனால், இன்றோ நிறைவானவர்களைக் கொண்டு எல்லையற்ற பயன்களை உங்களுக்கு அள்ளித்தரும் சிறப்பான செயலிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

விதையாய் விழுந்த நித்ரா ஆண்ட்ராய்ட் என்னும் சிறுதுளியில் துளிர்விட்டு, பயனாளர்களாகிய உங்களின் முழு ஆதரவையும் உரமாக எடுத்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் விருட்சமாகி, IOS-ல் அடியெடுத்து வைத்து அனைவரும் பயன்படும் இந்த தருணத்தில் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை நித்ரா தெரிவித்துக்கொள்கிறது.

இந்திய நாட்டைக் காக்கும் நம் தமிழ் இராணுவ வீரர்களும், நம் தமிழ் மண்ணின் நினைவுகளைச் சுமந்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உட்பட உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நித்ரா செயலிகளை பயன்படுத்தும்போது தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது என்று நெகிழ்ச்சியாக கூறுவது நம்மை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
- என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க நித்ராவின் 200+ செயலிகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் மன நிறைவும் நித்ராவிற்கு பெருமை சேர்க்கிறது.

செம்மொழி கொண்ட நம் தாய்நாட்டில் உங்களுள் ஒரு தமிழனாய் தமிழ் மண்ணில் 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நித்ராவிற்கு உங்களின் உறுதியான, நம்பிக்கையான ஆதரவினை என்றும், எப்போதும் வழங்கிடுங்கள்!.

1672

+ Viewer's

94

+ Wishes

வெற்றி எனும் படிக்கட்டை எட்டிப்பிடிக்க.. நித்ராவின் வெற்றிக்கு வித்திட்டவர்கள்!....